பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில், பொருளாதார பத்திரிகையொன்று நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜெட்லி பங்கேற்றார். நிகழ்ச்சியில் ஜெட்லி பேசியதாவது: பொருளாதார சீர்திருத்த பாதையில் அரசு தொடர்ந்து பயணிக்க உள்ளது. நாம், அடிப்படை கட்டமைப்பை மாற்ற இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது. <br />சில நேரங்களில் சீர்திருத்தங்களின் வேகம் குறைவாக இருக்கலாம். ஆனால் நமது பாதை தெளிவானது. இதில் முடிவு என்பது கிடையாது. இது ஒரு பயணம். ஜிஎஸ்டியால் அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. <br /> <br />Union finance minister Arun Jaitley said on Saturday that bold steps like GST and bank recapitalisation will make India a cleaner economy.
